6 15
இலங்கைசெய்திகள்

இலங்கையை நெருங்கும் புயல்! நாட்டுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு கடல் பகுதிகளில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாட்டின் தெற்குப் பகுதியிலும் மாலத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியிலும் தற்போது பலத்த மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக காற்று வரைபடம் மற்றும், வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில்(windy) சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த மழை வீழ்ச்சி நாட்டின் மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும், மத்திய மாகாணத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு அடுத்த சில நாட்களில் மழை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு மற்றும் தென்மேற்கு மாகாணங்களில் (மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு) பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வடமத்திய, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் பிற்பகல் நாளை பி.ப 2.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...