வரலாற்று புகழ்பெற்ற ஆரியகுளம் நாகவிகாரை பற்றி சி.வி.கே.சிவஞானம் தெரிவித்த கருத்து தொடர்பாக பொறுப்புடன் மக்கள் முன் ஆதாரங்களை வெளியிட வேண்டுமென யாழ் சிவில் சமூக நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார்.
நேற்று (16) தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
ஆரியகுளம் நாகவிகாரை வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். சி.வி.கே.சிவஞானம் ஒரு மூத்த அரசியல்வாதி. ஆனால் அவர் இவ்வாறு பொறுப்பற்ற விதமாக நாகவிகாரை காணி சிவன் கோவிலுக்குரியது என எவ்வித ஆதாரமும் இல்லாத ஒரு கருத்தை சொல்வதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
இது மதங்களுக்கிடையில் வன்முறையையும் இனங்களுக்கிடையே குரோதத்தையும் ஏற்படுத்தும்.
ஆரியகுளம் நாகவிகாரை பற்றி சி.வி.கே.சிவஞானம் தெரிவித்த கருத்து தொடர்பாக பொறுப்புடன் மக்கள் முன் ஆதாரங்களை வெளியிட வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக அறிக்கைகளை மாத்திரம் விடக்கூடாது என்றார்.
யாழ் சைவ பௌத்த சங்கமும் யாழ் அம்பேத்கர் இயக்கமும் இணைந்து ஊடக சந்திப்பை மேற்கொண்டன.
#SrilankaNewws
Leave a comment