rtjy 289 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

மாகாண சபை அதிகாரங்களை வழங்க வேண்டியது இப்போது அவசியம்: சீ.வீ.விக்னேஸ்வரன்

Share

மாகாண சபை அதிகாரங்களை வழங்க வேண்டியது இப்போது அவசியம்: சீ.வீ.விக்னேஸ்வரன்

இலங்கையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளை உருவாக்கி அதிகாரங்களை வழங்க வேண்டியது முன்னரை விடவும் இப்போது அவசியம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்தியாவும், நடைமுறைப்படுத்த போவதாக இலங்கையும் தெரிவித்திருந்த நிலையில் அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதால் இந்த விடயத்தில் இந்தியா கரிசனை கொள்ள வேண்டுமென்றும் கோரியுள்ளார்.

13 ஆவது திருத்த நடைமுறையாக்கம் தொடர்பில் யாழிலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்று(28.09.2023) நடாத்திய கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

”பதின்மூன்றாவது திருத்தச் சட்ட நடைமுறையாக்கம் தொடர்பாக ஐனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் இன்று என்னையும் சந்தித்து கலந்துரையாடி இருக்கின்றனர்.

குறிப்பாக 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற போது அந்தச் சட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை திரும்பப்பெற வேண்டியது மிகவும் அவசியம்.

இதனடிப்படையில் பறிக்கப்பட்ட அதிகாரங்களை தொடர்ந்தும் எப்படி மீள எடுப்பது சம்பந்தமான நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

அதற்கமைய இன்றும் நாங்கள் தொடர்ந்து பேசி இருக்கின்றோம். கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி இது சம்பந்தமாக விசாரணை செய்வதற்கான அந்தக் குழுவை வர்த்தமானி மூலமாக பிரசுரிப்பதாகச் சொல்லப்பட்டது.

எனினும் அது வெளிவராத நிலையில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு என்று பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்.

இதனால் எங்களுக்கு தாமதம் ஏற்படுவதனால் இது சம்பந்தமான நிபுணர் குழுவின் ஊடாக எவ்வாறு எடுக்க வேண்டும் என ஆராய்ந்திருக்கிறோம்.

எனினும் ஒரு நிபுணர்கள் குழு தீர்மானித்து அரசாங்கத்துக்கு அறிவுரை வழங்குவது தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கமைய இந்த திட்டத்தில் இனியும் தாமதம் ஏற்படக்கூடாது என்ற காரணத்திற்காக நாங்கள் இது சம்பந்தமாக என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதாக இன்று நாங்கள் பேசிக் கொண்டோம்.

முக்கியமாக இந்தச் சட்டத்தில் இருந்து பறிபோன அந்த அதிகாரங்களை திரும்ப பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது.

அதனை இந்தியாவும் கருத்தில் எடுத்துக் கொண்டு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இது சம்பந்தமாக இந்தியாவும் தன்னுடைய கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் எங்களுக்கு இருக்கின்றது.

ஆனால் ஜனாதிபதியினுடைய எண்ணங்கள் எவ்வாறு இருக்கின்றது என்பது பற்றி எங்களுக்கு தெரியவில்லை.

எனினும் அவர் தனக்கு பதிலாக இங்கு இருக்கும் ஏனைய அலுவலர்கள் அல்லது அரசியல்வாதிகள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்ற எண்ணமும் இருக்கிறது.

இந்த 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளை உருவாக்க வேண்டிய அவசியம் எப்பொழுதும் இல்லாததை பார்க்கவும் இப்போது மிக அதிகமாகியிருக்கிறது.

குறிப்பாக தமிழ் மக்களினுடைய சகல அதிகாரங்களும் குறைந்து கொண்டு வருகின்றது.

அரசாங்கத்தின் அனுசரணையோடு தமிழ் மக்களுக்கு எதிரான அல்லது ஏற்றுக் கொள்ள முடியாதவாறு பலவிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட அதிகாரங்களின் அபகரிப்பு என்பன தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இதற்கமைய, இவற்றை நாங்கள் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களுடைய அதிகாரங்களை பலப்படுத்துவதற்கு முதற்கட்டமாக மாகாண சபைகள் அமைக்கப் பெறுவது அவசியம்.

அதற்குரிய நடவடிக்கைகள் எவ்வாறு எடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக நாங்கள் ஆராய்ந்துள்ளோம்.

இன்றைய தினம் இவை பற்றி பலவிதமான கோணங்களில் நாங்கள் பேசியும் இருக்கின்றோம். விசேடமாக அரசியல் யாப்பில் எந்தெந்த உறுப்புரைகளின் அடிப்படையிலேயே இவற்றை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் முக்கியமாக 154 ரி (154 T) ஏற்பாடுகளை நாங்கள் பரீட்சித்து பார்த்தோம்.

இதில் முக்கியமாக யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை தலைவியான கோசலை மதனும் இது சம்பந்தமாக தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இதற்கமைய 13-வது திருத்தச் சட்ட நடைமுறையாக்கம் சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அந்த திருத்ததிலிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள பெறுவதற்கு நாங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அரசாங்கத்தினுடைய அனுசரணையை பெற வேண்டும் என்பது பற்றியும், இந்தியாவினுடைய கரிசனையை இதற்கு பெற வேண்டும் என்பது சம்பந்தமாகவும் நாங்கள் கலந்தரையாடியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...