val
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆவா குழு தலைவன் மீது வாள்வெட்டு!

Share

ஆவா குழு தலைவன் மீது வாள்வெட்டு!ஆவா என்று அழைக்கப்படும் வினோதன் என்ற வன்முறைக் கும்பலின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

படுகாயங்களுக்குள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தியவர்களில் ஐவர் கைது செய்யப்பட்டதுடன் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அண்மையாக இன்று நண்பகல் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆவா வினோதன் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு சென்று திரும்பிய போது வீதியில் நின்ற 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த வினோதன் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதலின் போது வாள் ஒன்று உடைவடைந்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களில் அளவெட்டியைச் சேர்ந்த ஐவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனி குழுவுக்கும் ஆவா குழுவுக்கும் இடையிலான முறுகல் நிலையே இந்த வாள்வெட்டுத் தாக்குதலுக்கு காரணம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.

#SriLankaNews

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...