நாட்டில் பொருட்களின் விலை திடீரென அதிகரித்து வருவதோடு, அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவித்து வரும் நிலையில், அரசாங்கத்திடன் இருக்க வேண்டிய கையிருப்பும் இல்லாத நிலை காணப்படுகிறது.
இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இதேவேளை எதிர்வரக்கூடிய மாதங்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுமென எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.
நாட்டில், சீனி, பால்மா, எரிவாயு சிலிண்டர்கள் என வரிசையாக தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்தநிலையில் கொழும்பு கொம்பனி வீதியில், சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டால், எரிவாயு சிலிண்டர்களைத் தாங்கியவாறு பொதுமக்கள் இன்று எரிவாயு விற்பனை நிலையங்களின் முன் காத்திருந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
#SrilankaNews
Leave a comment