தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் முதலாம் திகதியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் இரவு நேரங்களில் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு உத்தரவு பிறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து நாடு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நாடு திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் சுகாதார அமைச்சால் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட உள்ளது என கொவிட் செயலணியின் பிரதான இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Leave a comment