யாழில் வங்கியில் இருந்து பணத்தினை மீளப்பெற்று சென்ற முதியவரிடம் வழிப்பறிக் கொள்ளையர்கள் பணத்தினைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தினை மீளப்பெற்றுக்கொண்டு, வீதிக்கு வந்த போது, துவிச்சக்கர வண்டியில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் பணத்தினைக் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது-
#SrilankaNews
Leave a comment