கம்பளையில் தந்தை, மற்றும் சிறிய தந்தையின் தாக்குதல் காரணமாக 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பளையில் பகுதியில், குறித்த சிறுமியை ஆண் நண்பருடன் பார்த்த அவருடைய சிறிய தந்தை சிறுமியை தாக்கியதாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நேற்று (21) காலை, சிறுமி உடல்நிலை பாதிப்பால், வலியால் புலம்பியபோது, சிறுமியின் தந்தை அவரை நித்திரை செய்ய விடமாட்டேன் என்று கூறி தாக்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்து சிறுமியை அவரது தாயார் கம்பளை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இருப்பினும் குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தின் பின்னணியில் பொலிஸார் சிறுமியின் தந்தை மற்றும் சிறிய தந்தையைக் கைது விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.
#SrilankaNews
Leave a comment