tamilni 204 scaled
இலங்கைசெய்திகள்

கிரிக்கெட் தேர்வுக்குழு பதவியிலிருந்து விலக மாட்டேன் : பிரமோத்ய விக்ரமசிங்க

Share

கிரிக்கெட் தேர்வுக்குழு பதவியிலிருந்து விலக மாட்டேன் : பிரமோத்ய விக்ரமசிங்க

இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து நான் விலக மாட்டேன். அமைச்சர் வேண்டுமானால் தன்னை பதவியில் இருந்து நீக்கலாம் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தற்போதைய இலங்கை கிரிக்கெட் இளைஞர் அணி அடுத்த உலகக் கிண்ணத்தை நிச்சயம் வெல்லும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிம்பாப்வேயில் நடைபெற்ற உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டித் தொடரில் 12ஆவது இடத்தில் இருந்த போதிலும், அந்தப் போட்டியின் பின்னர் 09ஆவது இடத்திற்கு வந்ததாகவும், அந்த வெற்றி மனப்பான்மையுடன் இலங்கை உலகக் கிண்ணத்திற்குள் நுழையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் ஐந்தாண்டுகளில் தான் கட்டமைத்த இளைஞர் அணி எந்த நிலையில் இருக்கும் என்று பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...