கொவிட் நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றக்கூடிய ‘ரீகன் கோவ்’ என்ற மருந்தை இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சின் மருந்து நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த மருந்தானது கொவிட் நோயாளர்களின் உயிர் ஆபத்தை 81 வீதம் குறைக்கிறது என சோதனைகள் காட்டுகின்றன. அத்துடன் நாள்பட்ட நோயாளர்களுக்கு இந்த மருந்து பொருத்தமானது எனவும் கூறப்படுகிறது.
அதன்படி அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்திய போன்ற பல நாடுகள் இந்த மருந்தை வழங்க ஒப்புதல் அளித்தள்ளன.
இலங்கைக்கு இந்த மருந்தை கொண்டு வர தனியார் நிறுவனம் ஒப்புதல் அளித்தபோதிலும் சில தடை காரணமாக மருந்தை இறக்குமதிய செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட போது இந்த மருந்தை பயன்படுத்தினார் எனவும் இந்த மருந்தை பற்றி பேசிய முதல் நபரும் அவராவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment