வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தைச் சேர்ந்த மூவர் சுகயீனம் காரணமாக வவுனியா மருத்துவமனைக்கு சென்றவேளை அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனினும் குறித்த மூவரும் மருத்துவமனையில் தங்கிச்செல்லாமல் தப்பிச்சென்றிருந்தனர்.
இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்ட சுகாதாரப் பிரிவினர் குறித்த கிராமத்தில் தேடுதல் நடத்தி ஏழு பேரை தனிமைப்படுத்தியிருந்தனர் எனினும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதனை பின்பற்றாது வெளியில் சுற்றித்திரிந்துள்ளனர்.
இது தொடர்பில் சுகாதாரப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த கிராமத்தை சேர்ந்த 150 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 32 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Leave a comment