நிறுவனங்களில் கொவிட் அதிகாரி!
நிறுவனங்கள் அனைத்திலும் கொவிட் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
நியமிக்கப்படும் குறித்த அதிகாரியின் ஊடாக நிறுவன ரீதியாக அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை கண்காணித்து மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் பிராந்தியத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரியுடன் தொடர்புகளை பேணுதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந் நடவடிக்கை மூலமாக சமூகத்தில் கொவிட் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் சுகாதார அமைச்சு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
Leave a comment