நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என கொழும்பு – பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் தற்போது வைரஸ் காய்ச்சல் மட்டும் டெங்கு காய்ச்சல் ஆகியனவும் பரவலாக பரவி வருகின்றன. இந்த நிலையில் பெற்றோர் தமது குழந்தைகள் தொடர்பில் மிக அவதானமாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment