721187541parliamnet5 1
அரசியல்இலங்கைசெய்திகள்

22 மீதான நீதிமன்ற அறிக்கை சபாநாயகரிடம்!

Share

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச சபையில் அறிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்சவின் தலைமையில் கூடிய போது சபாநாயகர் அறிவிப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் மீதான பரிசீலனை அண்மையில் நிறைவடைந்திருந்தது.

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட 9 பேரினால் குறித்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த மனுக்களில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச சபைக்கு அறிவித்தபோதும் அது தொடர்பான விபரங்களை அவர் வெளியிடவில்லை.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...