நாடு ஸ்தம்பிதமடையப்போகிறது: மனம் திறந்த வர்த்தக அமைச்சர்!-

Bandula Gunawardena

நாடு முழுவதும் ஸ்தம்பித்து போகும் நிலை ஏற்படுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான அந்நியச் செலாவணி முகாமைத்துவம் காரண மாக டொலர் கையிருப்பு குறைந்துள்ளது.

கொரோனா எதிரொலி காரணமாக நாட்டின் நிலைமையானது பாரதூரமாக மாறியுள்ளது. டொலர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக இலங்கை டொலர்களை அச்சிட முடியாது.

இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் கூடுமான அளவில் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் அரிசி, பால் மா, சீனி மாத்திரமல்ல எரிபொருளையும் இறக்குமதி செய்ய முடியாது போனால், முழு நாடும் ஸ்தம்பித்தமடையும் என எச்சரிகை விடுத்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version