வரலாறு காணாதளவிற்கு பொருளாதார நெருக்கடி நிலைமையை நாடு எதிர்நோக்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு ஒரே வழி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு பிள்ளை கடுமையாக நோய் வாய்ப்பட்டால் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டும். மாறாக வீட்டில் கசாயங்களை வைத்து கொடுத்து வீட்டில் பராமரிப்பது பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்தார்
ஒக்டோபர், நவம்பர் மாதங்களுக்கு இடையில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 30 வீத வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் இது மறை பெறுமதியை எட்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment