24 661ddd3e63c56
இலங்கைசெய்திகள்

கப்பல் ஊடாக நாட்டை வந்தடைந்த ஆயிரக்கணக்கானோர்!

Share

கப்பல் ஊடாக நாட்டை வந்தடைந்த ஆயிரக்கணக்கானோர்!

இத்தாலி நாட்டுக்கு சொந்தமான கொஸ்டா டெலிசியோசா(Costa Deliziosa) என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலில் 1,978 பயணிகளும், 906 பணிக்குழாமினரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கப்பல் ஊடாக பிரித்தானியா(United Kingdom), ஜப்பான்(Japan) மற்றும் அமெரிக்கா(United States of America) ஆகிய நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று(15.04.2024)வருகை தந்துள்ளனர்.

அவர்கள் காலி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் சுற்றுலாவில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பயணிகள் கப்பல் மாலைதீவு நோக்கி செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Share
தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...