கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
“பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனித நேயத்திற்கு செய்யும் மரியாதை” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நிகழ்வின் ஒரு அங்கமாக வடக்கு மாகாணத்திற்கான நிகழ்வு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருந்தொற்றின் போது உயிர் நீர்த்தவர்களுக்கு ஒரு நிமிட மெளன வணக்கம் செலுத்தப்பட்டதுடன் பெருந்தொற்றின் போது செயற்பட்ட சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், முப்படைகளின் உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் கொவிட் தொற்று காலத்தின் மனித நேயப்பணிகளை முன்னெடுத்த வைத்தியர்கள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment