சிறுவர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் கொரோனா!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் சிறுவர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பரவி வருகிறது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 180 சிறுவர்கள் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 25 சிறுவர்கள் பலியாகியுள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமந்த ஆனந்த தெரிவித்தார்.
நாட்டில் கொரோனாத் தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.நேற்று மட்டும் 3 லட்சத்து 644 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment