வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் கோப்பாய் தேசிய கல்லூரி தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
திடீர் சுகவீனம் காரணமாக வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவருக்கு மேற்கொண்ட அன்டிஜென் சோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் கோப்பாய் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Leave a comment