ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அகில எல்லாவவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது. அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் கொரோனா வேகமாக பரவிவருகின்றது.
இதுவரை 10 இற்கும் மேற்பட்ட எம்பிக்கள் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment