நாட்டில் 103 சீன பிரஜைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பணியாற்றிய சீனர்களுக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் கடந்த 10 நாட்களுக்குள் இலங்கைக்கு வந்தவர்கள் எனவும், அவர்கள் இதுவரையில், பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment