வவுனியாவில் ஐவர் கொரோனாத் தொற்றால் நேற்று மரணமடைந்தனர்.
குறித்த நபர்களில் நால்வர் திடீர் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இவர்கள் நால்வரும் இறந்துள்ளனர்.
மற்றைய ஒருவர் பம்பைமடுவில் அமைந்துள்ள முதியோர் காப்பகத்தில் சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment