கொரோனா தொற்று 2,641 – சாவு 144

corona update

corona update

நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நேற்று 144 பேர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி 77 ஆண்களும் 67 பெண்களுமே உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 122 பேரும் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 21 பேரும் 30க்கு கீழ்பட்டோரில் ஒருவருமே கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாட்டில் இன்றைய தினம் 2 ஆயிரத்து 641 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதன்படி தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 77 ஆயிரத்து 421 ஆக உயர்வடைந்துள்ளது.

Exit mobile version