cope 1
இலங்கைசெய்திகள்

சர்ச்சை கருத்து! – மின்சாரசபை முன்னாள் தலைவர் மீது கோப்குழு நடவடிக்கை?

Share

கோப்குழுவில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பின்னர் அதனை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்த இலங்கை மின்சாரசபை முன்னாள் தலைவர் எம்.சீ.சீ. பெர்டினாண்டோ தொடர்பாக கோப்குழு அடுத்தவாரம் தீர்மானம் எடுக்கும் என கோப்குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.

இலங்கை மின்சாரசபையின் முன்னாள் தலைவர் எம்.சி.சி. பெர்டினாண்டோ கடந்தவாரம் கோப்குழுவில் ஜனாதிபதி தொடர்பில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை மின்சாரசபையின் செயலாற்றுகை தொடர்பாக அறிவதற்காக அதன் அதிகாரிகள் கோப்குழுவுக்கு கடந்த வாரம் அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது மின்சாரசபையின் தலைவர் எம்.சி.சி. பெர்டினாண்டோ, இந்திய பிரதமர் ஜனாதிபதிக்கு தெரிவித்திருக்கும் அறிவிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த விடயங்கள் ஊடகங்களில் பிரசாரமாகிய பின்னர் ஜனாதிபதி அதனை நிராகரித்திருந்தார். அதன் பின்னர் எம்.சி.சி. பெர்டினாண்டோவும் தான் தெரிவித்திருந்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

அதுதொடர்பில் அனுப்பி இருந்த கடிதம் நேற்று எனக்கு கிடைத்தது. எனவே அவர் தொடர்பில் அடுத்தவாரம் கோப்குழு கூடி தீர்மானம் எடுப்போம் என்றார்.

மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு கையளிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அழுத்தம் பிரயோகித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னிடம் கூறினார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை இலங்கை மின்சாரசபையின் முன்னாள் தலைவர் எம்.சி.சி. பெர்டினாண்டோ கோப்குழுவில் தெரிவித்திருந்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...