24 66162fcf543ae
இலங்கைசெய்திகள்

மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் முடிவு

Share

மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் முடிவு

பண்டிகை க் காலத்தில் ஒன்பது வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

விலைக்கட்டுப்பாடு தொடர்பில் அதிகாரசபை மேலும் தகவல் வெளியிடுகையில்,

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை மிகவும் நியாயமாக விலையில் மக்கள் கொள்வனவு செய்யும் வகையில் ஒன்பது அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கோதுமை மா 189 முதல் 208 ரூபா வரையிலும், பருப்பு கிலோ 312 முதல் 327 ரூபா என விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோ 174 முதல் 214 ரூபா வரையிலும், சீன வெங்காயம் ஒரு கிலோ 298 முதல் 328 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

அத்துடன், ஒரு கிலோ சின்ன வெங்காயம் 349 முதல் 384 ரூபா வரையும் உலர் நெத்தலி (தாய்லாந்து) கிலோ ஒன்று 869 முதல் 955 ரூபா வரையிலும், காய்ந்த மிளகாய் 818 ரூபா முதல் 859 வரையும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை மேலும் குறிப்பிடுகிறது.

Share
தொடர்புடையது
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Lightning
இலங்கை

அம்பாறையில் மின்னல் தாக்கியதில் முற்றாக அழிவடைந்த வீடு.

நேற்று மாலை பெய்த பலத்த மழையின் போது அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில்...

kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...