1680009268 petromlem 2
இலங்கைசெய்திகள்

தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்!

Share

பௌசர்களுக்கு எரிபொருள் நிரப்புதல் மற்றும் விநியோகிப்பதில் இருந்து விலகி தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கொலன்னாவ பெற்றோலிய முனைய வளாகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஏகபோக அதிகாரத்தையும், பெற்றோலியம் இறக்குமதியை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோலிய ஊழியர்கள் நேற்று (27) காலை முதல் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

எனினும், அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்காததால், இன்று (28) பிற்பகல் 2 மணி அளவில், சத்தியாக்கிரகத்தை முடித்துக் கொண்டு, அவசர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, பெற்றோலிய ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அவசர தொழிற்சங்க நடவடிக்கையினால் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தடைபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய ஊழியர்களின் பணியை சீர்குலைக்கும் ஊழியர்களுக்கு எதிராக பணிநீக்கம் மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனைய தலைவருக்கே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...