சஹ்ரான் அரச புலனாய்வு பிரிவினருடன் சம்பந்தப்பட்டவர், அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இவர் இவ்வாறு நிராகரிப்பு செய்தார்.
” இது தொடர்பில் குற்றச்சாட்டு வெளியான பின்னர் முழுமையானதொரு விசாரணை நடத்தப்பட்டது. அதில் மேற்படி குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்பது உறுதியானது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் இதில் பெரும் பங்கு வகித்துள்ளார்.”- என்றார்.
அதேவேளை, எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் பாதுகாப்பு செயலாளர் நிராகரித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment