மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நீக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் சஜித் கூறியவை வருமூறு,
“சபாநாயகர் , உங்கள் தலையீட்டால், மத்திய வங்கியின் ஆளுநர் பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டு, நாடு செல்ல வேண்டிய எதிர்கால பொருளாதாரப் பாதை குறித்து மிக முக்கியமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். கலாநிதி நந்தலால் வீரசிங்க ஓய்வு பெற்று ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அவரை கோட்டாபய ராஜபக்சவே மீண்டும் அழைத்து வந்தார். கலாநிதி நந்தலால் வீரசிங்க சிறந்த அதிகாரி. எனவே, அவர் ஆளுநரானதை நாம் வரவேற்கின்றோம்.
ஆனால், அவரை அழைத்து அவர்மீது பழிசுமத்துவது ஏற்புடைய விடயம் அல்ல. நேற்றைய தினம் சபையில் இந்த அரச தரப்பு உறுப்பினர்கள் நாட்டை வங்குரோத்து செய்யும் முடிவை எடுத்தவர் மத்திய வங்கி ஆளுநரே என கருத்து தெரிவித்திருந்த போதும் நேரடியாக கூறவில்லை. மறைமுகமாக சாடியிருந்தனர். மத்திய வங்கி ஆளுநரை நீக்குவதற்கு ஆளுங்கட்சியினர் சதித்திட்டம் தீட்டுகின்றனரா” – என்றார் சஜித்.
#SriLankaNews
Leave a comment