jafna uni students 1040x620 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்.பல்கலைக்கழக முன்றலில் குழப்பம்!!

Share

யாழ் பல்கலைக்கழக முன்றலில் மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே நேற்றிரவு முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் “இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கு கரிநாள்” என குறிப்பிடப்பட்ட பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் முன்பாக பிற்பகல் 5 மணி முதல் சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் 7.30 மணி அளவில் கோப்பாய் பொலிஸார் முச்சக்கரவண்டியில் குறித்த பதாகை கட்டப்பட்ட இடத்திற்கு வருகை தந்து பதாகையை கழற்றி முச்சக்கர வண்டியில் வைக்க முற்பட்டனர்.

பல்கலை மாணவர்கள் “எதற்காக பதாகையை கழற்றுகிறீர்கள்” என கேள்வி எழுப்பினர்.இந்த நிலையில் பொலிஸ் தலைமையகத்தில் இருந்து தங்களுக்கு இதனை அகற்றுமாறு பணிப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மாணவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதபட்ட நிலையில் மாணவர்கள் குறித்த இடத்திற்கு ஒன்றுகூட உங்களுக்கு பதாகை வேண்டுமெனில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தாருங்கள் என தெரிவித்து விட்டு, குறித்த இடத்திலிருந்து பொலிஸார் சென்றுள்ளனர் .
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...