காலாவதியாகும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற மேல் மாகாணத்தில் சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதத்தொகை விதிக்கப்படமாட்டாது.
அத்துடன் இதற்கான சலுகைக்காலம் நவம்பர் 30 ஆம் திகதி வரை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த திணைக்களத்தின் கணினி வலையமைப்பு அவ்வப்போது செயலிழப்பதால் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கணினி வலையமைப்பு செயற்படும் சந்தர்ப்பங்களில் வாகன வரி வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் சேவை நடைபெறும். வழங்கப்படும்
இவ்வாறு மேல் மாகாண பிரதான செயலாளர் ஜே.எம்.சீ. ஜயந்தி விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
Leave a comment