18 7
இலங்கைசெய்திகள்

வைத்திய அதிகாரிகளின் ஓய்வூதிய வயதில் மாற்றம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

Share

வைத்திய அதிகாரிகளின் ஓய்வூதிய வயதில் மாற்றம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக திருத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபாலவினால், மாகாண சுகாதார செயலாளர்கள், கொழும்பு, கண்டி மற்றும் காலி தேசிய வைத்தியசாலைகளின் பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகங்கள், அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்கள், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்திய நிபுணர்கள், அனைத்து தர வைத்திய அதிகாரிகள், விசேட பல் சத்திரசிகிச்சை நிபுணர்கள், அனைத்து பல் சத்திரசிகிச்சை நிபுணர்கள், அனைத்து நிர்வாக தர வைத்திய அதிகாரிகள் மற்றும் அரச பதிவு வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய சட்டத்தின் உரிய விதிகளை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதனை திருத்துமாறு 01-07-2024 அன்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால விடுத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...

QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...

bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...

கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...