இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொதியை தொலைத்தவர்களுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு!

police edited
Share

யாழ்ப்பாணம் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக அனுப்பப்பட்ட பொதி ஒன்றினை தொலைத்து விட்டு , யாழ்ப்பாணத்தில் பொதியை பெற இருந்தவரை தகாத வார்த்தைகளால் பேசி , மிரட்டியமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கான 6ஆயிரம் ரூபாய் பெறுமதியான உதிரிப்பாகம் ஒன்றினை கொழும்பில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு கொள்வனவு செய்து , அதனை யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தின் பொதிகள் சேவைகள் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு 600 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டு , அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் குறித்த பொதியினை பெற சென்ற போது , பொதி தொலைந்து விட்டது என பொறுப்பற்ற விதத்தில் பதில் அளித்தததுடன் , பொதியினை தொலைத்தமையால் பொதியில் இருந்த பொருளின் விலையை தருமாறு கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அதேவேளை தாம் இவர்களின் பொதிகள் சேவைகளை நம்பி கட்டணம் செலுத்தி பொதிகளை அனுப்பும் போது பொறுப்பற்ற விதமாக அவற்றினை தவற விட்டு விட்டு , எந்தவிதமான பொறுப்பும் அற்ற வகையில் தம்மை தகாத வார்த்தைகளால் பேசியமையால் தான் மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சகல விதத்தாலும் நாம் நசுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறோம் என கவலை தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...