பிரதி சபாநாயகர் பதவிக்கும் போட்டி??

721187541parliamnet5

நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்முனை போட்டி நிலவக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பிரதி சபாநாயகர் பதவியை வகித்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கடந்த 22 ஆம் திகதியுடன் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டார்.

இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் 04 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது முதல் தேர்வாக, பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற வேண்டும்.

ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டால் ஏகமனதாக தெரிவு இடம்பெறும். இருவர் போட்டியிட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இதன்படி ஆளுங்கட்சியின் சார்பில் டிலான் பெரேராவும், 11 கட்சிகளின் சார்பில் அநுர பிரியதர்சன யாப்பாவும் பிரதி சபாநாயகர் பதவிக்கு போட்டியிடக்கூடும். மறுபுறத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் உறுப்பினர் ஒருவரை நிறுத்தக்கூடும்.

#SriLankaNews

Exit mobile version