6 46
இலங்கைசெய்திகள்

தேசியப் பட்டியலுக்காக உயிரை மாய்த்து கொள்ளவும் துணிந்த முன்னாள் எம்.பி!

Share

தேசியப் பட்டியலுக்காக உயிரை மாய்த்து கொள்ளவும் துணிந்த முன்னாள் எம்.பி!

தேசியப்பட்டியல் மூலம் தாம் நாடாளுமன்றுக்கு நியமிக்கப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் (Thushara Indunil) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறியுள்ளதாவது, “நான் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் 40,000 க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றேன். எனவே என்னை தேசிய பட்டியலிலிருந்து நியமிக்க வேண்டும்.

நான் ஏற்கனவே கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேசியுள்ளேன், அவர் எனது கோரிக்கைக்கு செவிசாய்ப்பார் என்று நான் நம்புகிறேன்.

என்னை நாடாளுமன்றுக்கு நியமிக்காவிட்டால் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.

அத்துடன், தேசியப் பட்டியல் மூலம் தங்களை நியமிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருவதால், கட்சித் தலைவர் ஆதரவற்ற நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கட்சித் தலைவர் அளித்த வாக்குறுதியின்படி தனக்கும் தேசியப் பட்டியலில் இடம் கிடைக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

தன்னை கண்டியில் இருந்து தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், கட்சித் தலைமை என்னை தேசிய பட்டியலிலிருந்து நியமிப்பதாக உறுதியளித்ததாகவும் தேசியப் பட்டியலில் இருந்து நியமிக்கப்படுவதற்கு தான் தகுதியானவன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
001111
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தில் அலட்சியப்படுத்தப்பட்டதா புலனாய்வுத் துறையின் தகவல்கள்?

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் இடம்பெறுவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...