முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை 11 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
#SriLankaNews
Leave a comment