முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதிய மாக்சிச லெனின் கட்சியின் ஏற்பாட்டில் புத்தூர் கலைமதி மக்கள் மண்டபத்தில் மாலை ஆறு மணிக்கு இடம் பெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா செந்தில் வேல் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றதுடன் பொதுச்சுடர் ஏற்றி அக வணக்கம் செலுத்தப்பட்டது.
இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் குறித்த பகுதியில் வழங்கி வைக்கப்பட்டது.நிகழ்வில் கட்சியை ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இறுதியுத்த்தில் உயிர் இழந்த மக்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர்.
#srilankaNews