இலங்கை - தாய்லாந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவை
இலங்கைசெய்திகள்

இலங்கை – தாய்லாந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவை

Share

இலங்கை – தாய்லாந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவை

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான குறைந்த கட்டண நேரடி விமான சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எயார் ஏசியாவின் AIQ-140 விமானம் தாய்லாந்தின் Don Mueang சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று இரவு 10.10 மணியளவில் வந்தடைந்துள்ளது.

அந்த விமானத்தில் 134 பயணிகள் மற்றும் 07 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.

மேலும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 174 பயணிகளுடன் தாய்லாந்து திரும்பியது.

அதற்கமைய, தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் வாரத்திற்கு 04 விமானங்கள் சேவையில் ஈடுபடுவதுடன், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் குறித்த விமானங்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தையும் பயணிகளையும் வரவேற்கும் வைபவம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...