Vraie Cally Balthazaar
இலங்கைசெய்திகள்

விழிப்புலனற்றோர் சவால்களை உணர: கண் கட்டப்பட்ட நிலையில் கொழும்பு நகரில் நடந்த மாநகர முதல்வர் வ்ராய் கெலீ பல்தாஸார்!

Share

விழிப்புலனற்றோர் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, நேற்று (நவம்பர் 11) கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலீ பல்தாஸார் (Vraîe Cally Balthazaar), கண்கள் கட்டப்பட்ட நிலையில் கொழும்பு நகரில் நடந்தார்.

பார்வை குறைபாடுடைய குழுவினருடன் இணைந்து கொழும்பைச் சுற்றி நடந்த மாநகர முதல்வர், பார்வை குறைபாடுடையவர்கள் நகரில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை நேரடியாக அனுபவித்து அறிந்துகொண்டார்.

கண் கட்டப்பட்ட நிலையில் இருந்த அவர், “பார்வை இல்லாமல் நகரில் நடப்பது எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவே நான் கண் கட்டப்பட்டேன்” என்று தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் இலங்கையின் முதலாவது விழிப்புலனற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவும் கலந்துகொண்டார்.

கொழும்பு நகரை அனைவரும் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் மேம்படுத்துவது தொடர்பான சவால்களையும், விழிப்புலனற்ற சமூகத்தின் தேவைகளையும் புரிந்துகொள்ள இந்த முயற்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...