கொழும்பு கண்காட்சியில் சீன வியாபார அங்காடிகளை புறக்கணிப்பு

குருந்தூர் மலை - தமிழ் எம்.பி.க்களுக்கு சவால்

குருந்தூர் மலை - தமிழ் எம்.பி.க்களுக்கு சவால்

கொழும்பு கண்காட்சியில் சீன வியாபார அங்காடிகளை புறக்கணிப்பு

கொழும்பு கண்காட்சியில் சீன வியாபார அங்காடிகளை இந்திய தூதர் புறக்கணித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த செய்தியை ஆங்கில இதழ் ஒன்று வெளியிட்டுள்ளது

8 ஆவது கட்டுமானம், சக்தி மற்றும் ஆற்றல் கண்காட்சி 2023, கடந்த வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த கண்காட்சியில் இந்தியாவின் துணை உயர் ஆணையர் வினோத் கே. ஜேக்கப் பங்கேற்றிருந்தார்.

இலங்கையின் கட்டுமானம், உள்துறை பொருட்கள், மின்சாரம் மற்றும் எரிசக்தி தொடர்பான துறைகளில் முதன்மையான கண்காட்சி ஜூலை 7 முதல் 9 வரை நடைபெற்றது.

இதில் சீனா மற்றும் இந்திய அங்காடிகள் கொண்ட சர்வதேச அரங்குகளை கொண்டிருந்த கண்காட்சியை திறந்த பின்னர், இந்திய துணை உயர் ஸ்தானிகர் இந்திய அங்காடிகளை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது கண்காட்சியின் சீனப் பகுதியை அவர் பார்வையிடுவார் என்று கலந்து கொண்டவர்கள் எதிர்பார்த்த நிலையில், பிரதி உயர் ஸ்தானிகர், இந்தியப் பகுதியைப் பார்வையிட்டவுடன் உடனடியாக வெளியேறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version