எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோதல்! – புடவை விற்பனை நிலையம் சேதம்

VideoCapture 20220802 132307 1

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் அப்பகுதியில் உள்ள புடவை விற்பனை நிலையமொன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் இரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் குறித்த விற்பனை நிலையம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தில் குறித்த விற்பனை நிலையத்தின் கண்ணாடி கதவுகள் அடித்து நொறுக்கப்படுள்ளதுடன் குறித்த புடவை விற்பனை நிலையத்தின் உரிமையாளரும் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் புடவை விற்பனை நிலைய உரிமையாளரினால் யாழ்ப்பாணம் பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version