கொவிட் 19 தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதோரின் தகவல்கள் பள்ளிவாசல்கள் ஊடாக திரட்டப்பட்டு வருகின்றன என வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் சமூகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் அதிகமானோர் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் அவர்கள் தொடர்பான விபரங்கள் தற்போது பள்ளிவாசல்கள் மூலம் திரட்டப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதை நிறைவேற்ற வேண்டும் என என அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையிலேயே தடுப்பூசி செலுத்தாதவர்களின் விபரங்கள் வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் திரட்டப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிக்கு பள்ளிவாசல் நிர்வாகங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – என்று கூறியுள்ளார்.
Leave a comment