2 7
இலங்கைசெய்திகள்

2 இலட்சமாக அதிகரிக்கப்படவுள்ள நாளாந்த தேங்காய் விற்பனை

Share

2 இலட்சமாக அதிகரிக்கப்படவுள்ள நாளாந்த தேங்காய் விற்பனை

லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை (09) முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

கொழும்பு (Colombo) உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள சதொச கிளைகளில் தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கான வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு விற்கப்படும் எனவும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தேங்காய் உற்பத்தி தடைப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...