வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த உங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் கூட்டணி அரசியல் பயணம் இனியும் சாத்தியப்படாது.”
இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரியப்படுத்தியுள்ளது.
வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.
இதன்போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்த்து வாக்களித்த போதிலும் அக்கட்சியின் ஏனைய எம்.பிக்கள் நால்வரும் ஆதரித்தே வாக்களித்தனர். அதேபோல ரிஷாட் பதியுதீன் பட்ஜட்டை எதிர்த்திருந்தாலும் அவரது கட்சியை சார்ந்த மூன்று எம்.பிக்கள் ஆதரித்து வாக்களித்திருந்தனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கூட்டணியின் முடிவுக்கு எதிராக செயற்பட்ட எம்.பிக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment