அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்
திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகளை மீளாய்வு செய்வதற்கான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 32 திட்ட அலுவலகங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
46 திட்ட அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களின் கீழ் இயங்க வேண்டும் என்றும் இது தொடர்பான குழு அறிக்கை பரிந்துரைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் அமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய 55 அலுவலகங்களும் மூடப்படுமா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தனது இணக்கத்தை தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் பெரிய திட்ட அலுவலகங்களை பராமரிக்க முடியாத நிலையில், குழுவொன்றை நியமித்து அந்த திட்ட அலுவலகங்களை மதிப்பீடு செய்ய ஜனாதிபதி அண்மையில் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment