24 6610bf32b4173
இலங்கைசெய்திகள்

15 ஆம் திகதி வரை காலநிலையில் மாற்றம்!

Share

காலநிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி இன்று(06.04.2024) நண்பகல் 12.12 அளவில் லெல்லோப்பிட்டி, பலாங்கொடை, புலத்சிங்கள, கல்தோட்டை மற்றும் வாத்துவை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, நேற்று(05.04.2023) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதேவேளை மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேல்,மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...