அரச பணியாளர்களது சம்பளத்தை அதிகரிக்காவிட்டால், பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம் என இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது.
கடந்த 13ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் கடிதம் மூலம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.
குறித்த கடிதம் தொடர்பில் சம்மேளத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பி.ஏ.பீ. பஸ்நாயக்க இம்முறை பட்ஜெட்டில், அரச பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதனால் அரச பணியாளர்கள் கடும் பொருளாதார பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளனர்.
மாதாந்தம் அவர்களது சம்பளத்தை 16,000 ரூபாயாகவும் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த கோரிக்கை அரசாங்கம் நிறைவேற்றாதபட்சத்தில் எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என, இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment