20 12
இலங்கைசெய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வாகன சர்ச்சை: விசாரணையில் சிக்கிய மகிந்தவின் சகா!

Share

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வாகன சர்ச்சை: விசாரணையில் சிக்கிய மகிந்தவின் சகா!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குறிய வாகன மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் டாக்சி அபே’ என்றழைக்கப்படும் காமினி அபேரத்ன சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் பணிப்பாளராக பணியாற்றிய காமினி அபேரத்ன, கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என கூறப்பட்ட சட்டவிரோதமாக ஒருங்கிணைக்கப்பட்ட காரை கைவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த கார் பதிவு செய்யப்படாமையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த தனியார் ஹோட்டலின் வாகனம் நிறுத்துமிடத்தில், ‘டபிள்யூபி சி 24-0430’ என்ற எண் கொண்ட கறுப்பு நிற BMW கார் சந்தேகத்திற்கிடமான முறையில் நிற்பதாக கிடைத்த தகவலின் பேரில், கடந்த 10 ஆம் திகதி முதல்(10.10.2024) விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த விசாரணைக்கு அமையவே காமினி அபேரத்ன தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் காமினி அபேரத்ன வாக்குமூலம் வழங்கவுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காமினி அபேரத்ன குறித்த தனியார் ஹோட்டலில் சில காலமாக தங்கியிருந்ததாகவும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் இந்த கார் ஹோட்டலின் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என பி. எம்.டபிள்யூ. கார் உதிரி பாகங்களில் இருந்து ஒருங்கிணைப்பு செய்யப்பட்டமை தெரியவந்தது.

கார் பதிவு செய்யப்படவில்லை என்றும், அது போலி எண் மூலம் பயன்படுத்தப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த காரில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான ஆவணங்களையும் இரகசிய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பில் வாக்குமூலம் வழங்க வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்த போதிலும், சுகயீனமுற்றிருப்பதால் பின்னர் வந்து வாக்குமூலம் வழங்குவதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சருக்கு எதிரான பயணத்தடையை பெற்றுக்கொள்ளவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
நிலந்த பிரேமரத்ன
இலங்கை

நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமனம்.

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவர் இந்த நியமனத்துடன்...

death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...