தேவாலயத்தில் கைக்குண்டு: மூவர் கைது!

Srilanka Police

கிறிஸ்தவ தேவாலயமான ஓல் செயின்ட்ஸ் தேவாலயமான வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பொறளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேவாலயத்தின் பணியாளர் ஒருவர் குறித்த கைக்குண்டை இனங்கண்டு வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் குறித்த கைக்குண்டை மீட்டுள்ளனர். அத்துடன்
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைக்குண்டை செயலிழக்க வைப்பதற்கு விசேட அதிரடிப்படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.

Exit mobile version