வடக்குக்கான சீன விஜயம் இந்திய உறவை பாதிப்பதாக அமைந்துள்ளது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற தமிழ் பேசும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சீனாவுடன் பெறுமதியான உதவிகள் பல பெறப்பட்டுள்ளன. இந்தியாவுடன் தமிழ் மக்களுக்கு கலாசார, மொழி, மத தொடர்புகள் உள்ளன. சீனர்களின் வடக்குக்கான விஜயம் இத்தொடர்பை பாதிப்பதாக அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவர்கள் இருவருக்குமான வல்லரசு பிரச்சினைகள், முரண்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் சிறிய நாடான இலங்கையை பாதிக்கும்.
யாராக இருந்தாலும் சொந்த நலனுக்காகவே செயற்படுவார்கள். ஆகவே, இலங்கை அரசாங்கம் சீனாவுடன் மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment